×

வெடி விபத்தில் பெற்றோரை இழந்த சிறுமிக்கு ரூ. 5 லட்சம் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

சாத்தூர்,பிப்.23: சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் தாய். தந்தையை இழந்த சிறுமி நந்தினியின் படிப்புச் செலவுக்கு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தனது சொந்த நிதியில் ரூ.5 லட்சம் வழங்கினார். சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் கடந்த 12ம் தேதி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 21 பேர் இதுவரை  உயிரிழந்துள்ளனர். இதில் நடுசுரங்குடி கிராமத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர். இந்நிலையில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த நடுசுரங்குடியை சேர்ந்த பாக்கியராஜ், செல்வி தம்பதியினருக்கு ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயதான நந்தினி என்ற பெண் குழந்தை உள்ளது.

வெடி விபத்தில் தாய், தந்தையை இழந்த நந்தினி வீட்டுக்கு நேரில் நேற்று சென்று ஆறுதல் கூறிய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, சிறுமிக்கு தேவையான ஆடைகள் மற்றும் பொருட்களை கொடுத்தார். மேலும் அந்த சிறுமி 12ம் வகுப்பு வரை படிப்பதற்கு  தனது சொந்த நிதியில் இருந்து  ரூ.5 லட்சத்தை சிறுமியிடம் வழங்கினார். மேலும் சிறுமியின் மேற்படிப்பு மற்றும் திருமணம் உள்ளிட்டவைகளுக்கும் உதவிகளை  செய்வதாக கூறினார். அவருடன் அதிமுக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முக்கனி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் விஜய நல்லதம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

Tags : Minister ,Rajendrapalaji ,
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...