அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

விருதுநகர், பிப்.23:  விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்தர்ராணி, மாவட்ட செயலாளர் சாரதா பாய் தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்து வருகிறது.  போராட்டத்தில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். முறையான வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு ரூ.10லட்சம், உதவியாளர்களுக்கு ரூ.5லட்சம் பணிக்கொடையாக வழங்க வேண்டுமென்ற 3 கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காத்திருப்பு போராட்டத்தை நடத்த இருப்பதாக தெரிவித்தனர். மேலும் திருச்சுழி குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் வாசுகியிடம் இருந்து குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தையும், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பணியாளர் விரோத போக்கை கைவிட கோரியும் கோஷம் எழுப்பினர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் பங்கேற்றனர்.

Related Stories:

>