பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேனி, ஆண்டிபட்டியில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

தேனி/ஆண்டிபட்டி, பிப். 23: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேனி, ஆண்டிபட்டியில் திமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். தேனி வடக்கு மாவட்ட திமுக சார்பில், தேனி பங்களா மேட்டில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது தேனி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர்  தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்எல்ஏ  சரவணக்குமார், திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர் எல்.மூக்கையா,  முன்னாள் எம்எல்ஏ லட்சுமணன் முன்னிலை வகித்தனர். நகர திமுக பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், ‘பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்தும், தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.

தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில், ‘அண்டை நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை குறைவாக விற்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை ஏற்றியதால் ஏழை,  எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பொதுமக்களுக்கு எதிராக செயல்படும்  எடப்பாடி அரசை விரட்டுவோம்’ என்றார். ஆர்ப்பாட்டத்தில், ‘தேனி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் சக்கரவர்த்தி, பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் வக்கீல் பாண்டியன், சின்னமனூர் மேற்கு ஒன்றியப் பொறுப்பாளர்  முருகேசன், நகர பொறுப்பாளர்கள் பெரியகுளம் முரளி, போடி செல்வராஜ், மாவட்ட  பொறுப்பு குழு உறுப்பினர்கள் செல்லபாண்டியன், வக்கீல் ராஜசேகர், அய்யப்பன், சுரேஷ். நாராயண பாண்டியன், ஜீவா, வீனஸ் கண்ணன், வக்கீல்  செல்வம் மாவட்ட  இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பரணீஸ்வரன், தர்மராஜ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வக்கில் ஸ்டீபன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்

வக்கீல் சுகுமாரன் உள்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக தேனியில் உள்ள மதுரை சாலையில் மாட்டுவண்டியில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடந்த  இடத்திற்கு தங்கதமிழ்ச்செல்வன் ஊர்வலமாக வந்தார். இவருடன், எம்எல்ஏ சரவணன்,  தேனி சூர்யா பாலமுருகன் உடன் வந்தனர்.

ஆண்டிபட்டி: திமுக தெற்கு மாவட்டம் சார்பில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஆண்டிபட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எம்.எல்.ஏ மகாராஜன் தலைமை வகித்தார். தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். இதில், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், மத்திய,, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள்  எழுப்பினர். கம்பம் ராமகிருஷ்ணன் பேசுகையில், ‘மத்திய அரசு 22 ரூபாய்க்கு கச்சா எண்ணெய், அதனை சுத்திகரிக்க 6 ரூபாய் என 28 ரூபாய்க்கு விற்க வேண்டிய பெட்ரோலை தேவையற்ற வரிகளை போட்டு, 92 ரூபாய்க்கு விற்கிறது. தமிழகத்தில் அரசு வாகனங்களுக்கு மட்டும் தினசரி 23 லட்சம் லிட்டர் மேல் டீசல் செலவாகிறது. இந்த செலவுகளை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்துவார்கள்’ என்றார்.  

எம்.எல்.ஏ மகாராஜன் பேசுகையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மிழக மக்களுக்கு ஒபிஎஸ்-இபிஎஸ் செய்யும் துரோகம். அடுத்த அமாவாசைக்குள் அவர்களது ஆட்சி முடிவுக்கு வரும்’ என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் குருஇளங்கோ, பாதுகாப்பு உறுப்பினர் அரிச்சந்திரன், ஒன்றியப் பொறுப்பாளர்கள் ராஜாராம், சூர்யா தங்கராஜ், அணைப்பட்டி முருகேஷன், அண்ணாதுரை, வழக்கறிஞர் சுப்பிரமணி, தங்கபாண்டியன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆசையன், மயில்வாகனன், முன்னாள் கடமலை-மயிலை சேர்மன் சேர்மலை உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related Stories:

>