×

பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் சாதனைகளை கூறி திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் தீவிர வாக்கு சேகரிப்பு: பணிகள் தொடரும் என்று வாக்குறுதி

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவின் ஆர்.டி சேகர் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை பெரம்பூர் கஸ்தூரிபாய் காலனி, காந்திநகர், சாந்தி நகர் மெயின் ரோடு, ஸ்ரீராம் நகர், கணேசபுரம், சுந்தரம் பவர் லைன், ஏ.கல்யாணபுரம் உள்ளிட்ட இடங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

குறிப்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 29 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் குழந்தைகள் நல மையம் கட்டப்பட்டது. மாநகர ஆரம்ப சுகாதார மையம் 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. சத்தியமூர்த்தி நகர் டி.டி பிளாக் குடியிருப்பில் 66 லட்சத்து 41 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் மற்றும் கண்காணிப்பு கேமரா வசதிகள் செய்து தரப்பட்டது. மூர்த்திங்கர் நகர் திட்ட பகுதியில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. சுமார் ஒரு கோடியே 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் உடற்பயிற்சி கூடம், மகளிர் திறந்தவெளி உடற்பயிற்சி கூடம், உள்விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது.

69 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 4 இடங்களில் மாநகராட்சி ஒப்பனை அறைகள் கட்டப்பட்டது. சூழ்புனல்கரை டாக்டர் அம்பேத்கர் தெருவில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அதே பகுதியில் 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags : Perampur Assembly Constituency ,Dimuka ,R. D. Chekar ,Perampur ,Dimukhin ,R. De Chekar ,Perampur Kasturibhai Colony ,Gandhi Nagar ,Santi Nagar Main Road ,Sriram Nagar ,Ganeshapuram ,Sundaram Power Line ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...