பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

ஆண்டிபட்டி, பிப். 23: ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீனிவாசப்பெருமாள் மற்றும் செல்வவிநாயகர் கோயிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து விக்னேஸ்வரா பூஜை, ஆராதனம், புண்ணிய வாசனம், கோபூஜை, கஜபூஜை, வேதிகா ஆராதனம், பரிவார தேவதைகள் மற்றும் நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. விநாயகர் கோவில், ஸ்ரீ பூதேவி, சமேத சீனிவாச பெருமாள் மற்றும் பரிவார சுவாமிகளுக்கு விமானம் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் விமானங்களில் ஊற்றப்பட்டு, பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>