×

தொகுதி மறுவரையறை – குறுக்குவழியில் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு… திமுக எதிர்ப்பு

தொகுதி மறுவரையறை – குறுக்குவழியில் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு… திமுக எதிர்ப்பு

டெல்லி: நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரைறை மசோதா குறித்து பேசிய திமுக எம்.பி-யான டி.ஆர்.பாலு, தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக எதிர்ப்பதாகவும், அதே நேரம் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதாகவும் கூறி உள்ளார். தொகுதி மறுவரையறையை குறுக்குவழியில் திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசு முயற்சிப்பதாக டி.ஆர்.பாலு சாடி உள்ளார்.

தொகுதி மறுவரைறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் நகலை எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் எரித்துள்ளதாக குறிப்பிட்ட டி.ஆர்.பாலு, இந்த மசோதாவை திமுக திட்டவட்டமாக எதிர்ப்பதாகவும், ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் கூறி உள்ளார்.

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், தொகுதி மறுவரையறை மசோதாவை ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் ரேம் மேக்வால் தாக்கல் செய்தார்.ஒன்றிய அரசு நிறைவேற்ற துடிக்கும் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு அறிமுக நிலையிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அறிமுக நிலையிலேயே தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543-லிருந்து 850-ஆக அதிகரிக்க செய்யும் தொகுதி மறுவரையறை மசோதா இன்று தாக்கலாகிறது. தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள சில எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கருப்பு சட்டை அணிந்து உள்ளனர்.

மாநில சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி உள்ளதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள மசோதாக்கள் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படை மீதான தாக்குதல் என கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா 2023-ல் நிறைவேற்றப்பட்ட நிலையில், 2024 மக்களவை தேர்தலின்போது நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அப்போது அதை ஏற்க மறுத்த ஒன்றிய அரசு, அவசரகதியில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற தற்போது முயற்சிப்பது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி உள்ளன. அரசியலமைப்பு மாநிலங்களுக்கு வழங்கி உள்ள பாதுகாப்பை முற்றிலும் தகர்க்க பாஜக முயல்கிறது, தற்போது அவசரகதியில் மசோதாக்களை ஒன்றிய அரசு தாக்கல் செய்யும் விதமே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை கபளீகரம் செய்ய பாஜக அரசு முயற்சிக்கிறது என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.சி.வேணுகோபால் குற்றம்சாட்டி பேசினார்.

Tags : EU government ,dimuka ,UNION GOVERNMENT ,CROSSHAUL ,DELHI ,YANA T. R. ,Palu ,
× RELATED கச்சா எண்ணெய் தொடர்பாக இந்தியாவிற்கு...