×

10 ஆண்டாக டிமிக்கி கொடுத்த பலே திருடன் கைது

கம்பம், பிப். 23:  திருட்டு வழக்கில் கடந்த 10 ஆண்டாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்த பலே திருடனை போலீசார் நேற்று கைது செய்தனர். கம்பம் நாட்டுக்கல் தெருவைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வீட்டில் கடந்த 2012ல் தங்கநகை, பணம் மற்றும் செல்போன் திருடு போனது. இது தொடர்பாக கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் திருச்சியைச் சேர்ந்த சுலைமான் மகன் அல்லாபிச்சை (36) என்பவர் திருடியது உறுதி செய்யப்பட்டு, அவர் மீது வழக்கு பதிவு செய்து கம்பம் வடக்கு போலீஸார் அவரை தேடி வந்தனர். இந்நிலையில், அல்லாபிச்சை கம்பம் மட்டுமல்லாமல் தேனி, கரூர், விருதுநகர், முசிறி, உடுமலை மற்றும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் திருட்டுச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், அல்லாபிச்சையை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இதற்கிடையில், நேற்று நமக்கல்லில் அல்லாபிச்சை இருப்பதாக கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கம்பம் வடக்கு போலீசார் நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருந்த அல்லாபிச்சையை கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த பத்து வருடமாக பல்வேறு ஊர்களில் திருட்டு வழக்கில் தலைமறைவாக வாழ்ந்த பலே திருடன் சிக்கினான்.

Tags : Bale ,Timmy ,
× RELATED இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.50 லட்சம் பீடி இலை பறிமுதல்