×

ஆடிட்டர், பைனான்சியர் வீடுகளில் ஐடி ரெய்டு

திண்டுக்கல், ஏப். 16: திண்டுக்கல் துரைராஜ் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். ஆடிட்டர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இவரின் வீட்டில் நேற்று மாலை 4 மணிக்கு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். 30 நிமிடம் நடந்த சோதனை 4:30 மணிக்கு நிறைவடைந்தது.

இதுபோல், விவேகானந்த நகரை சேர்ந்த பைனான்சியர் வைரவன் வீட்டிலும் 2 கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேர் கொண்ட குழுவினர் ரெய்டு நடத்தினர். இதில் ஆன்லைன் பணப்பரிமாற்றம், வங்கிக்கணக்கு பரிவரித்தனைகள், ரொக்கம், வரி உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags : Dindigul ,Balasubramanian ,Durairaj Nagar ,Income Tax Department ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...