×

சு.ஆடுதுறை அபராத ரட்சகர் கோயிலில் பிரதோஷ வழிபாடு

குன்னம்,ஏப்.16: சு.ஆடுதுறை அபராத ரட்சகர் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள சு.ஆடுதுறை கிராமத்தில் ஸ்ரீ அபராதரட்சகர் (குற்றம் பொருத்தவர்) உடனுறை சுகுந்த குந்தலாம்பிகை கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  இதை முன்னிட்டு சுவாமி, அம்மன் மற்றும் நந்தி பகவானுக்கு பால் பன்னீர் சந்தனம் மஞ்சள் இளநீர் உட்பட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி, அம்மனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. பிரதோஷம் அன்று சிவன் கோவில் பிரகாரத்தை 108 அல்லது 1008 முறை சுற்றி வந்தால் திருமணத்தடை புத்திர பாக்கியம் கடன் பிரச்சனை தீரும் என்பது ஐதீகம். பிரதோஷ பூஜையில் கழனிவாசல் பெண்னகோணம், கீழக்குடிகாடு, ஒகளுர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை கோயில் குருக்கள் கார்த்திக் மற்றும் அறங்காவலர் குழுத் தலைவர் கவியரசன் செய்து இருந்தனர். இதேபோல் திருமாந்துறை, குன்னம், அத்தியூர், நன்னை சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

 

Tags : Su.Aduthurai Aalaiya ,Rakshakar Temple ,Kunnam ,Su.Aduthurai Aalaiya Rakshakar ,Temple ,Sukuntha Kunthalambigai Temple ,Sri Aalaiya Rakshakar ,Su.Aduthurai ,Perambalur district… ,
× RELATED துவரங்குறிச்சி அருகே 2 மலைப்பாம்பு பிடிபட்டது