×

திருப்பத்தூர் தொகுதியில் பெரியகருப்பன் போட்டியிட விருப்ப மனு பள்ளத்தூர் கே.எஸ்.ரவி தாக்கல் செய்தார்

காரைக்குடி, பிப்.23:  திருப்பத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, காரைக்குடி தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் தென்னவன் ஆகியோருக்கு பள்ளத்தூர் கே.எஸ்.ரவி விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். திமுக சார்பில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 18ம் தேதி முதல் 28ம் தேதி வரை விருப்ப மனு பெற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி சிவகங்கை மாவட்டத்துக்கு உட்பட்ட திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ போடியிடவும், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் மாநில இலக்கிய அணி தலைவர் மு.தென்னவன் ஆகியோர் போட்டியிட இளைஞரணி முன்னாள் துணை அமைப்பாளர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி சார்பில் தலைமை கழகத்தில் தலா ரூ.25000 செலுத்தி விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tags : Pallathur ,KS Ravi ,Periyakaruppan ,Tirupati ,
× RELATED அரசின் சாதனை விளக்க கண்காட்சி அமைச்சர் திறந்து வைத்தார்