உலகத் தாய்மொழி நாள் விழா

காரைக்குடி, பிப்.23: காரைக்குடி அருகே கோவிலூர் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில், உலக தாய் மொழி நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்துறை தலைவர் சங்கரதாசு வரவேற்றார். கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் தலைமை வகித்தார். கோவிலூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்பஞான தேசிக சுவாமிகள் துவக்கி வைத்து பேசுகையில், மாணவர்கள் தமிழில் பிழையின்றி பேசவும், எழுதவும் முற்பட வேண்டும். தமிழில் உள்ள அனைத்து நூல்களையும் கற்க வேண்டும் என்றார். ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியர் நாகநாதன், ஆங்கிலத்துறை பேராசிரியர் மதுபாலா உள்பட பலர் கலந்து கொண்டனர். உதவிப்பேராசிரியர் சுகுணா நன்றி கூறினார்.

Related Stories:

>