தேவகோட்டை கோயிலில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை, பிப்.23:  தேவகோட்டை நித்திய கல்யாணிபுரம் சக்தி முத்துக்குமார சுவாமி ஆலய வளாகத்தில் உள்ள பாகம்பிரியாள் சமேத திருக்கயிலேஸ்வர சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கோபூஜை, தன பூஜை, கணபதி ஹோமம் நடைபெற்றது. நேற்று இரண்டாம் காலபூஜை, யாகபூஜை, பூர்ணாகுதி நடைபெற்றது. பின்னர் பரிவார விமான மூலஸ்தான கும்பாபிஷகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள், வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றினர். திரளான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: