மாநில அளவிலான கபடி போட்டி புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்

சாயல்குடி, பிப்.23: முதுகுளத்தூரில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் முதல் இடத்தை பெற்றது. முதுகுளத்தூரில் ராமநாதபுரம் அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் கழகம் இணைந்து 47வது மாநில அளவிலான கபடி போட்டியை நடத்தியது. இதில் தமிழகத்தின் 38 மாவட்டங்களை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட அணிகளின் வீரர்கள் பங்கேற்றனர். மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இரவு,பகலாக நடந்த போட்டியில் ப்ரோ கபடி முறை பின்பற்றப்பட்டது. நேற்று நடந்த இறுதி போட்டியில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தையும், திருப்பூர் இரண்டாம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணியினருக்கு ரொக்கப்பணமும், கோப்பைகள், கேடயங்களும் வழங்கப்பட்டது. இக்கபடி போட்டியில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த கபடி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>