அரூர், ஏப்.16: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், கூட்டணி கட்சியினருடன் நகர் மற்றும் கிராமப்புறங்களில் வீடு, வீடாக நேரில் சென்று திமுக அரசின் சாதனை திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், கூட்டணி கட்சியினருடன், தொகுதி முழுவதுமாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் அவருடைய ஆட்சி காலத்தில் தொகுதி மேம்பாட்டிற்கு அவர் செய்த செயல்களை பட்டியலிட்டு தீவிர வாக்கு சேகரித்தார். மேலும், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியை, மேலும் மேம்படுத்த சொந்த ஊர் என்பதால் தொகுதியில் உள்ளவர்கள் நேரடியாக எளிதில் சந்தித்து, அவர்களுடைய கோரிக்கைகளை கூறினால், உடனடியாக அவை நிறைவேற்றி வைக்கப்படும் என கூறினார்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள இளைஞர்கள் முன்னேற்றத்திற்கான புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு, நான் முதல்வன் திட்டம், 35 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மடிகணினி, 10 லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள், 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாககம், மகளிர் வீடுகளுக்கு தேவையான பொருட்கள் வாங்க ரூ.8000 கூப்பன், மகளிர் உரிமைத்தொகை ரூ.2 ஆயிரமாக அதிகரிப்பு, விவசாயிகளுக்கு மீட்டர் இல்லாத மின்சார மோட்டார் இலவசமாக வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களை எடுத்துரைத்தார். தமிழக அரசின் திட்டங்கள் தொடர, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, தன்னை வெற்றிபெறச் செய்ய வேண்டும். மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்கி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சர் ஆக மக்கள் வெற்றிபெறச்செய்ய வேண்டும் கேட்டுக்கொண்டார். வேட்பாளர் பழனியப்பன் பிரசரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் பொது மக்கள் அவரை வரவேற்றனர். திரளான பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
