×

மேலூரில் ஆடு வழங்கும் திட்டத்தில் ‘கடைசி வரை’ காக்க வைத்த கால்நடை மருத்துவர்கள் பயனாளிகள் தவிப்பு

மேலூர், பிப். 23: மேலூரில் ஒருங்கிணைந்த கால்நடை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மாடு, ஆடு, கோழி ஆகியவை மானிய உதவியுடன் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் மாடுகள் வழங்கப்பட்டு விட்ட நிலையில், நேற்று ஆடுகள் வழங்க உள்ளதாக பதிவு பெற்ற விவசாயிகளை கால்நடை துறையினர் அழைத்துள்ளனர். இதற்கு விவசாயிகள் தங்களுக்கு தேவையான ஆடுகளை சந்தைகளில் கொள்முதல் செய்து, பின்னர் அதனை கால்நடை மருத்துமனைக்கு கொண்டு வர வேண்டும். அங்கு அவற்றை சோதனை செய்த பிறகு, அவற்றுக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டு, ஆட்டின் காதில் வில்லை ஒட்டப்பட்ட பிறகு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி நேற்று மேலூர் வாரச்சந்தை என்பதால் அதிகாலை 4 மணிக்கே வந்து ஆடுகளை தேர்வு செய்த விவசாயிகள், அவற்றை கால்நடை டாக்டர்களிடம் காட்டுவதற்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு பணியில் இருந்த டாக்டர்கள்,  ஊழியர்கள் இவர்களை கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் காலை 11.30 மணிக்கு இவர்களிடம் எந்த பதிலும் சொல்லாமல் அனைவரும் மருத்துவமனையை மூடி விட்டு சென்று விட்டனர். காலையில் இருந்து கால்நடைகளுக்கு உணவு அளிக்காமல் இருந்ததால் அவை மயங்கி விழுந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி வரை கால்நடை டாக்டர்களுக்காக காத்திருந்த 10க்கும் மேற்பட்ட பயனாளிகள் விரக்தியுடன் ஆடுகளை வேன்களில் ஏற்றி சென்றனர்.

Tags : Melur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!