×

ஒட்டன்சத்திரத்தில் இடிந்து விழும் நிலையில் இயங்கி வரும் ரேஷன் கடை

ஒட்டன்சத்திரம், பிப்.23: ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட கே.கே.நகர் என்சிடிசி ரேஷன் கடை  மிகவும் பழுதடைந்துள்ளது.  எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வாரத்தின் 6 நாட்களிலும் இப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்க அதிகளவில் வந்து செல்கின்றனர். மேலும் மழைக்காலங்களிலும் மிகுந்த ஈரப்பதத்துடன் விழுந்து விடும் நிலையில் இக்கட்டிடம் காணப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், கே.கே.நகரில் செயல்படும் என்சிடிசி ரேஷன் கடை கடந்த 35 ஆண்டுகளாக இக்கட்டிடத்தில் இயங்கி வருகிறது. சுமார் 500க்கும் மேற்பட்டோர் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். கட்டிடத்தின் மேல்தளம், கீழ்தளம், நுழைவாயில் ஆகிய பகுதிகள் மிகவும் சேதமடைந்து, எந்த நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மேலும் கட்டிடத்தைச் சுற்றி  முட்புதர்கள் சூழ்ந்து விஷஜந்துக்கள் உள்ளன. இடிந்த கட்டிடத்தின் மேல் மரம் முளைத்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உயிர்பலி ஏற்படும் முன் கே.கே.நகர்  பகுதியில் உள்ள ரேஷன் கடையை இடித்துவிட்டு, அதே இடத்தில் புதிய ரேஷன் கடையை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Tags : Ottanchattaram ,
× RELATED தூய்மை நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்வு: அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்