திமுக மக்கள் கிராமசபை கூட்டம்

கோபால்பட்டி, பிப். 23: நந்தம் பகுதியில் சிரங்காட்டுப்பட்டி. கோட்டைப்பட்டி, பிள்ளையார் நத்தம் ஆகிய ஊர்களில் திமுக சார்பில் மக்கள் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன். இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி ஆகிய பிரச்னைகள் குறித்தும், பிள்ளையார் நத்தத்தில் செல்போன் கோபுரம் அமைக்கவும், பள்ளிச் சுற்றுச்சுவர், காவிரி கூட்டு குடிநீர் கொண்டு வரவும், நத்தம் தொகுதி திமுக எம்.எல்.ஏ  ஆண்டி அம்பலத்திடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், திண்டுக்கல் எம்பி தொகுதி நிதியிலிருந்து செல்போன் டவர் அமைக்கப்பட உள்ளதாகவும், காவிரி தண்ணீர் பிள்ளையார்நத்தத்துக்கு கொண்டு வரப்படுவதாகவும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் திமுக நகரச் செயலாளர் முத்துக்குமாரசாமி, ஒன்றியப் பொரறுப்பாளர் பழனிச்சாமி,  குடகிப்பட்டி பஞ்சாயத்து தலைவர்   அழகர்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>