சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தெலங்கானா கவர்னர் தமிழிசை சாமி தரிசனம்

சீர்காழி, பிப்.21: சீர்காழியில் புகழ்பெற்ற சட்டைநாதர் இக்கோயிலில் திருநிலைநாயகி பிரம்மபுரீஸ்வரர் சட்டைநாதர் அருள்பாலித்து வருகின்றனர். புகழ்பெற்ற இக்கோயிலுக்கு தெலங்கானா ஆளுனரும், புதுச்சேரி துணைநிலை ஆளுனருமான தமிழிசை சௌந்தரராஜன் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழிசை சௌந்தரராஜன் பிரம்மபுரீஸ்வரர் திருநிலைநாயகி சட்டைநாதர் தோணியப்பர் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

Related Stories:

>