×

கொட்டாய்மேடு கிராமத்தில் குடிசை வீட்டில் தீப்பிடித்து ரூ.2லட்சம் பொருட்கள் சேதம்

கொள்ளிடம், பிப்.21:மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே தாண்டவன்குளம் ஊராட்சியை சேர்ந்த கொட்டாய்மேடு கிராமத்தை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி குப்பண்ணசாமி. இவரின் குடிசை வீடு நேற்று வீட்டிற்குள் ஏற்பட்ட மின் கசிவால் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடிசை வீடு மற்றும் வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த அனைத்து அத்தியாவசிய பொருட்களும் எரிந்து சாம்பலாயின. இதில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Kottaymedu ,
× RELATED ரூ.10 லட்சம் முறைகேடு!: மதுரை மாவட்டம்...