×

அரியலூர் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்கள் கல்வி பயில நடவடிக்கை

அரியலூர், பிப்.21: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, தொடர்ந்து கல்வி பயிலுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ரத்னா தலைமையில் நேற்று ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இதில், கலெக்டர் தெரிவித்ததாவது, அரியலூர் மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10ம் வகுப்பில் 214 மாணவ, மாணவிகளும், 12ம் வகுப்பில் 199 மாணவ, மாணவிகளும் தங்களது கல்வி தொடராமல் இருப்பது, கல்வித்துறை மூலமாக தகவல்கள் சேரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் குறித்த விபரங்கள் வருவாய்த்துறையினர் மூலம் கண்டறிந்து, அவர்கள் தொடர்ந்து கல்வி பயிலுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், குடும்ப வறுமை, தாய், தந்தை இழந்த குழந்தைகள், குழந்தை தொழிலாளராக பணிபுரிவோர்கள் உள்ளிட்ட விபரங்கள் வருவாய்த்துறையினர் மூலமாக சேகரிக்கப்பட்டு, இதனை கலைவதற்கும், தொடர்ந்து அம்மாணவர்கள் கல்வி பயிலுவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரியலூர் மாவட்டம் கல்வி வளர்ச்சியில் முன்னேறிய மாவட்டமாக மாற்றமடையும். மேலும், பள்ளி செல்லும் வயதுடைய மாணவர்களை குழந்தை தொழிலாளார் நியமிப்பதோ, அவர்களை பள்ளி செல்வதை ஏதோ ஒரு வகையில் தடை செய்வதோ தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்தில் ஈடுபடுவோர்களுக்கு காவல்துறை மூலம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில், டிஆர்ஓ ஜெய்னுலாப்தீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பூங்கோதை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Ariyalur district ,
× RELATED அரியலூர் மாவட்டம் நின்னியூர் காலனி...