×

கோவையில் மாநில தடகள போட்டி பெரம்பலூரை சேர்ந்த மாற்றுத்திறன் வீரர்கள் சாதனை

பெரம்பலூர்,பிப்.21: மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் பெரம்பலூர் மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர். கோவையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது மாநில அளவிலான தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகள் கடந்த 14, 15,16 ஆகிய 3 நாட்கள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு வகைகளில் மாற்றுத்திறனுடைய மொத்தம் 23 மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் சார்பாக, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன் தலைமையில் கலந்து கொண்டனர். இதில் விசுவக்குடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், தட்டுஎறிதல் ஆகிய போட் டிகளில் 3 தங்கப்பதக்கங்களை வென்றார். மேலமாத்தூர் கார்த்திக் ராஜா 5000 மீட்டர் ஓட்டத்தில், 1500 மீட்டர் ஓட்டத்தில், 800 மீட்டர் ஓட்டத்தில் என 3 பிரிவுகளில் தங்கப்பதக்கங்களை வென்றார். மங்கலமேட்டை சேர்ந்த அம்பிகா, நீச்சல் போட்டியில் ப்ரீ ஸ்டைல் பிரிவுகளில் 100 மீட்டர், 50 மீட்டர் ஆகிய இரண்டிலும் தங்கப்பதக்கங்களை வென்றார்.

அ.மேட்டூரை சேர்ந்த லதா குண்டு எறிதல் போட்டியில், 400 மீட்டர் ஓட்டப்போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் என 3 பிரிவுகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். அய்யர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் 5000 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். துறைமங்கலம் கே.கே நகர், கிருபாகரன் குண்டு எறிதல் போ ட்டியில் தங்கப்பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். மேலப்புலியூரை சேர்ந்த கலைச்செல்வன் 5000 மீட்டர் ஓட்டத்தில், 100 மீட்டர் நீச்சல் போட்டியின் பட்டர்பிளை பிரிவில் என 2 போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றார். மொத்தத்தில் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் தடகள மற்றும் நீச்சல் போட்டிகளில் 15 தங்கப்பதக்கங்கள், 4 வெள்ளிப்பதக்கங்கள், 1 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 20 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்  வெங்கட பிரி யா, வெற்றிபெற்று பதக்கங்களை வென்ற அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார். நிகழ்ச்சியின் போது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) ஜெயக்குமாரி, பெரம்பலூர் மாவட்ட தடகள பயிற்றுனர் கோகிலா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Perambalur State Athletics Championship ,Coimbatore ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...