×

அறந்தாங்கி- திருச்சிக்கு குளிர்சாதன பேருந்து இயக்கம்

அறந்தாங்கி, பிப்.21: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அறந்தாங்கி பனிமனையில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன பேருந்து இயக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அறந்தாங்கி பணிமனையில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து தினசரி காலை 6 மணி, பகல் 12 மணி, மாலை 5.30 மணி ஆகிய நேரங்களில் அறந்தாங்கி பேருந்து நிலையத்தில் புறப்படும். இந்த குளிர்சாதன அரசுப்பேருந்து குளவாய்பட்டி, புதுக்கோட்டை, கீரனூர் வழியாக திருச்சி செல்லும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அறந்தாங்கி வருகிறது. அறந்தாங்கியில் இருந்து திருச்சிக்கு குளிர்சாதன பேருந்து இயக்க கடந்த ஆண்டு வந்த பேருந்து கொரோனா தொற்று காரணமாக இயக்கப்படாமல் இருந்தது. தற்போது தமிழக அரசு குளிர்சாதன வசதி பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கியதை அடுத்து இப்பேருந்து இயக்கப்படுகிறது.

Tags : Aranthangi-Trichy ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...