×

காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் ப்ளஸ் 2 பொதுத் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை

பேராவூரணி, பிப்.21: பள்ளி மாணவர்கள் நலன் கருதி ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சங்க தலைவர் தர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு மேல்நிலை வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டிருக்கிறது. அதன்படி மே.3 முதல் 21ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நோய்த்தொற்று காரணமாக குறைந்திருந்த மாணவர்கள் வருகை தற்போதுதான் சீரடைந்து வருகிறது. 40 சதவீதம் பாடப்பகுதிகள் குறைக்கப்பட்டிருந்தாலும், பாடப் பகுதிகளை முழுமையாக நடத்தி முடிப்பதற்கு கிட்டத்தட்ட ஏப்ரல் மாதம் கடைசி வரை ஆகும். இதனிடையே செய்முறை தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

வினாத்தாள் வடிவமைப்பிலும், ப்ளூ பிரிண்ட் முறை கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் பாடப் பகுதிகளை முழுமையாக படித்தால் தான், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியும். மாணவர்கள் கூடுதல் சுமையுடன், கால அவகாசமின்றி தேர்வை எதிர்கொள்வது, அவர்களுக்கு அச்சத்தையும், மன அழுத்தத்தையும் தருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே, இவற்றை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலன் கருதியும் தமிழக அரசு அரசு பொதுத் தேர்வை ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags : Congressional ,
× RELATED மக்களவை தேர்தலுக்கான காங்கிரஸ்...