×

பக்தர்கள் தரிசனம் கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பேரணி

கும்பகோணம், பிப்.21: கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்கள், வணிகர்கள், வழக்கறிஞர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் 25 ஆண்டு கால கோரிக்கை இன்றளவும் கோரிக்கையாகவே நீடிக்கிறது. இதற்கிடையே, கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட புதிய மாவட்டம் அமைப்பது குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என தெரிவித்து 2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவேஇந்த கூட்டத்தொடரிலாவது, தமிழக முதல்வர் கும்பகோணம் புதிய மாவட்ட அறிவிப்பினை வெளியிட வலியுறுத்தும் வகையில், காந்தி பூங்கா முன்பு, செல்போன் மூலம் ஒளி பாய்ச்சியும், தொடர் முழக்கங்கள் எழுப்பியும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அடுத்து நேற்று கும்பேஸ்வரன் மேல வீதியில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக கோரிக்கை முழங்கங்களை எழுப்பியபடி, பெருந்திரள் பேரணியாக சென்று பழைய மீன் அங்காடியில் நிறைவு செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
ஆனால் போலீசார் உச்சிபிள்ளையார் கோயில் சந்திப்புடன் பேரணியை நிறைவு செய்ய அறிவுறுத்தியதை தொடர்ந்து உச்சிப்பிள்ளையார் கோயில் சந்திப்புடன் நிறைவு செய்யப்பட்டது. முன்னதாக இப்பேரணியை திருப்பனந்தாள் காசித்திருமட அதிபர் முத்துக்குமார தம்பிரான் சுவாமிகள் தொடங்கி வைத்தார்.இப்பேரணியில், பாமக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அமமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய ஜனநாயக மக்கள் கட்சி, விடுதலை தமிழ்புலிகள் கட்சி, நாம் தமிழர் கட்சி, வணிகர் சங்க பிரதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், வழக்கறிஞர் சங்கத்தினர், சமூக நலசங்க பிரதிநிதிகள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பா\ளர் ஸ்டாலின், கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்கும் வரை பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை நடத்தப்படும் என்றார்.

Tags : Darshan Kumbakonam ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு