×

பெருகவாழ்ந்தான் அருகே விஷம் கலந்த தவிட்டை தின்ற 2 கன்றுகள் சாவு ஒருவர் மீது வழக்கு

மன்னார்குடி, பிப். 21: திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தான் காவல் சரகத்திற்குட்பட்ட கர்ணாவூர் கிராமத்தில் தற்போது அறுவடை பணிகள் முடிந்து விளைநிலங்கள் தரிசாக உள்ளது. கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை வயல் வெளிகளில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம்.இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த கோபால் என்பவருக்கு சொந்தமான 3 கன்றுகள் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்பட்டது. மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தன. இதில் 2 காளை கன்றுகள் சம்பவ இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தது. ஒரு பசுமாடு உயிருக்கு போராடிய நிலையில் இருந்தது . இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாட்டின் உரிமையாளர் பசு மாட்டை மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் மாடு உயிர் பிழைத்தது.அக்கிராமத்தில் அறுவடை செய்யப்பட்டு வயல் வெளிகளில் குவித்து வைக்கப்பட்டிருந்த நெல்மணிகளை மாடுகள் தின்றதாக கூறப்படுகிறது. இதன் கார ணமாக அப்பகுதியை சேர்ந்த கீர்த்தி (60) என்ற விவசாயி விஷம் கலந்த தவிட்டை தனது வயலில் நெல் மணிகள் அருகில் வைத்திருந்தார். இந்த தவிட்டை தின்றதால் 2 கன்றுகள் உயிரிழந்தது தெரிய வந்தது.  இதுகுறித்து மாட்டின் உரிமையாளர் பெருகவாழ்ந்தான் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கீர்த்தி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED திருச்சி மத்திய சிறை நுழைவாயிலில் ரூ1.09...