- சித்ரா
- தமிழ் புத்தாண்டு
- அபூபக்கர்
- சென்னை
- ஜனாதிபதி
- இந்திய ஹஜ் சங்கம்
- தமிழர்கள்
- சித்ரா தினம்
- புதிய ஆண்டு
சென்னை: இந்திய ஹஜ் அசோசியேஷன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் வெளியிட்ட வாழ்த்து செய்தி: தமிழர்களின் வாழ்வில் ஆகச்சிறந்த நாளாக அமைந்திருப்பது சித்திரை நாளில் வரும் தமிழ் புத்தாண்டு. தமிழ் புத்தாண்டு என்பது தமிழ் இனத்தின் தனித்துவமான அடையாளம். எனவே இந்த நாள் முதல் நம் ஒவ்வொருவரின் அடையாளமும் தனித்துவமாய் மாறட்டும். அமைதியும், அன்பும், நலமும் வளமும் நாளும் சூழட்டும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் என்ற இனிமையான வாக்கு சித்திரை திங்களில் இருந்து ஒவ்வொரு தமிழர்களின் வாழ்விலும் பூத்துக் குலுங்கட்டும். புத்தம் புதிய தமிழ் புத்தாண்டை வரவேற்போம் என்று குறிப்பிட்டுள்ளார்.
