பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை அரசு கட்டுப்படுத்த வேண்டும் திமுக தகவல் தொழில் நுட்ப அணி வலியுறுத்தல்

மன்னார்குடி, பிப். 21: மன்னை மேற்கு ஒன்றிய திமுக

தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும், மாவட்ட ஊராட்சி தலைவருமான தலையா மங்கலம் பாலு தலைமையில் மன்னார்குடியில் நடைப் பெற்றது. மேற்கு ஒன்றிய செயலாளர் மேலவாசல் தன்ராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்எல்ஏ டிஆர்பி ராஐா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரவிந்த், துணை ஒருங்கிணைப்பாளர் மதி முத்துக்குமார், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் இந்திரஜித் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. கூட்டத்தில், மாவட்ட பிரதிநிதிகள் மகதை பாரதிமோகன், பரவை கிரி, ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கோவி அன்பழகன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி விவேக், சாய் செந்தில், அசோக் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக தகவல் தொழில் நுட்ப அணி ஒன்றிய அமைப்பாளர் சிவராஜ் வரவேற்றார். ஊராட்சி ஒருங்கிணைப்பாளர் மகதை ராஐ சோழன் நன்றி கூறினார்.

Related Stories:

>