தூத்துக்குடி: எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னையை சேர்ந்த பாஸ்கரன், வனிதா என்ற தம்பதியின் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் 2 நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தனர். கோவிலில் தரிசனத்தை முடித்துவிட்டு இன்று மதியம் சென்னை புறப்பட்டனர். அப்போது எட்டயபுரம் பகுதியில் எம்.கோட்டூர் அருகே சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது, கார் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி, வசந்தி ஆகியோர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிறுவர், சிறுமி எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளரும் சம்மந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த விபத்து அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
