×

ஜிம்னாஸ்டிக் சாம்பியன்களை வீழ்த்தும் அளவிற்கு கட்சி தாவியுள்ள குஷ்பு.!! பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கடும் விமர்சனம்

ஜிம்னாஸ்டிக் சாம்பியன்களை எல்லாம் வீழ்த்துகிற அளவுக்கு தனது அரசியல் வாழ்வில் வேறு வேறு கொள்கைகளை கொண்ட அரசியல் கட்சிகளில் நடிகை குஷ்பு மாறியிருக்கிறார் என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

நடிகை குஷ்பு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விட்டு, தற்போது பாஜகவில் இருப்பதை, “ஒரு ஜிம்னாஸ்டிக் வீராங்கனையை விட வேகமாக 3-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்குத் தாவியவர்” என்று பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கிண்டல் செய்தார். நடிகை குஷ்பு தற்போது வரை 3 கட்சிகளில் பயணித்துள்ள நிலையில், நான்காம் கட்சியாக புதிய நீதி கட்சியில் நேரடியாக சேராமல் தனது கணவரான சுந்தர் சி-யை சேர்த்து விட்டுள்ளதாக, மதுரை மத்திய தொகுதியில் திமுக வேட்பாளராக களமிறங்கி உள்ள எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் விமர்சித்து உள்ளார்.

தற்போது பாஜக-வில் உள்ள நடிகை குஷ்பு சாதாரண நபர் அல்ல, ஜிம்னாஸ்டிக் சாம்பியன்களை எல்லாம் வெல்லும் அளவிற்கு கடந்த 15 – 20 ஆண்டுகளில் மூன்று கட்சிகள் தாவிய ஒரு கோல்ட் மெடல் ஜிம்னாஸ்டிக்காக இருக்கிறார். ஒரு காலத்தில் திமுக-வில் உறுப்பினராக இருந்த நடிகை குஷ்பு, பின்னர் மதச்சார்பின்மையை கொள்கையாக கொண்ட காங்கிரசில் உறுப்பினராக, நிர்வாகியாக இருந்தார். ஆனால் தற்போதோ மதவெறியை கொண்ட பாஜக-வில் உறுப்பினராக, நிர்வாகியாக இருக்கிறார். புதிய நீதி கட்சி சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சுந்தர்.சி-க்கு மதுரை பற்றிய புரிதல் குறைவு எனவும், அவருக்கு எதையும் புரிந்துகொள்ளும் மனப்பான்மை இல்லை என்றும் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறி இருக்கிறார்.

அதே போல சுந்தர் சி வேட்பாளராக போட்டியிடும் தகவலை முதலில் வெளியே தெரிவித்ததை அவரது மனைவி நடிகை குஷ்பு தான். சரி புதிய நீதிக்கட்சி சின்னத்தில் சுந்தர் சி தேர்தலில் போட்டியிடுவார் என்று பார்த்தால் அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்று குஷ்பு குடும்பத்தை கடுமையாக சாடினார் திமுக வேட்பாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்.

Tags : Kushbu ,B. D. R. Palanivel ,Madurai Central Constituency ,Dimuka ,P. D. R. Palanivel Thyagarajan ,Kushpu Dimuka ,Congress ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...