×

ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் தரப்பு நன்றி!

 

சென்னை: உடல்நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக ராமதாஸ் தரப்பு நன்றி தெரிவித்துள்ளது. சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில், பாமகவின் ராமதாஸ் அணி சார்பில், சிட்டிங் எம்எல்ஏ அருள் 2வது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். இதையடுத்து, அவரை ஆதரித்து பிரசார கூட்டம், சேலம் பள்ளப்பட்டியில் நேற்றிரவு நடந்தது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அப்போது, கடந்த 5 ஆண்டுகளாக அருள் எம்எல்ஏ, தொகுதி மக்களுக்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு பேசிய அவர், மீண்டும் அவரை எம்எல்ஏவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து, கூட்டம் முடிந்ததும் ராமதாஸ் தனது மகள் ஸ்ரீகாந்தி மற்றும் உதவியாளர்கள் உதவியுடன், மேடையிலிருந்து கீழே இறங்க முயன்றார். மேடையின் சாய்தள பகுதிக்கு வந்த அவர், திடீரென மயங்கி சரிந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உதவியாளர்கள், அவரை தாங்கி பிடித்தனர். ஆனால், அவரால் எழுந்து நிற்க முடியவில்லை. இதையடுத்து, உடனடியாக அவரை தூக்கி கொண்டு, ஆம்புலன்சில் ஏற்றி காந்திரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதனால், கூட்டத்தில் இருந்த பாமகவினரிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் சிகிச்சையில் உள்ள ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக ராமதாஸ் தரப்பு நன்றி தெரிவித்துள்ளது. ராமதாஸ் தற்போது நலமுடன் உள்ளதாகவும், 2 நாட்களில் மீண்டும் பரப்புரைக்கு போகலாம் எனவும் மருத்துவர் தெரிவித்து இருந்தனர். இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்படவுள்ளார். சேலம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது மேல் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார்.

 

Tags : Chief Minister ,Ramadas ,K. The ,Ramdas ,Stalin ,Chennai ,MLA ,K. The Pamaka ,Salem West Assembly Constituency ,Bamaga ,
× RELATED நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி...