×

நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது

 

உத்தரப்பிரதேசம்: நொய்டாவில் ஊதிய உயர்வு கோரி தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஊதிய உயர்வு கேட்டு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உத்தர பிரதேச பாஜக அரசைக் கண்டித்து தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தக் கோரி நொய்டாவில் உள்ள தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

2 நாட்களாக போராட்டம் நடந்துவந்த நிலையில், 3வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வன்முறையில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன; சில கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நொய்டாவில் தொழிலாளர்கள் போராட்டத்தின்போது கல் வீச்சு சம்பவமும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.

 

Tags : Noida ,Uttar Pradesh ,Noida, Uttar Pradesh ,BJP government ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள 8...