×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனை!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனையாகிறது. சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஈரான் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

அதாவது தங்கம் விலை வார இறுதி நாளான நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.200 குறைந்தது. தங்கம் விலை கடந்த ஒரு மாதமாக ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையில் இருந்து வருகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை தங்கம் விலை உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ.125 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,125க்கும், பவுனுக்கு ரூ.1,000 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13,000க்கும் விற்பனையானது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கு விற்பனையானது.

இந்நிலையில் வாரத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,100க்கும், பவுனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 12,800க்கும் விற்பனையானது. வெள்ளி விலையில் நேற்று முன்தினம் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.265க்கும், பார் வெள்ளி ரூ.2.65 லட்சத்துக்கும் விற்பனையானது.

இதனிடையே நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய முன்தினம் விலையிலேயே தங்கம் விற்பனையானது. இந்நிலையில் இன்று காலை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.1,12,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.14,060க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.260க்கும், ஒரு கிலோ ரூ.2.60 லட்சத்திற்கும் விற்பனை ஆகிறது.

Tags : Chennai ,
× RELATED கடிதத்தில் இல்லாத எதையும் நான்...