சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம்

சிதம்பரம், பிப். 21: என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையில் நோயாளிகளின் வசதிக்காக ரூ.12.2 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் அமைக்கப்பட்டது. இதற்கான திறப்பு விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்தது. சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமை தாங்கினார். சிதம்பரம் அரசு மருத்துவமனை மருத்துவர் அசோக் பாஸ்கர் வரவேற்றார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவள துறை இயக்குனர்

விக்ரமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை திறந்து வைத்து பேசினார். என்எல்சி நிறுவனத்தின் தலைமை பொது மேலாளர் மோகன், அரசு மருத்துவமனை  மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories:

>