உடல்நலக்குறைவு, விபத்துகளில் இறந்த 56 காவலர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி : முதல்வர் எடப்பாடி உத்தரவு

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு சிறப்பு காவல் படை முதலாம் அணியில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த பத்மநாபன், ஐந்தாம் அணியில் காவலராக பணிபுரிந்து வந்த தமிழ்வாணன், சென்னை காவல் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த உமாராணி. ஆயுதப்படை 31ம் அணியில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த அந்தோணிசாமி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் 56 காவலர்கள் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைதெரிவித்துக்கொள்கிறேன். உயிரிழந்த 56 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண  நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>