×

சசிகலாவுக்கு எடப்பாடி பதில் சொல்வாரா?

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி திமுக வேட்பாளர் டிஆர்பி ராஜா, நன்னிலம் தொகுதியில் எஸ்டிபிஐ வேட்பாளர் முபாரக், நாகப்பட்டினம் தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் மனிதநேயமக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கீழ்வேளூர் சட்டசபை தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லதா, வேதாரண்யம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் புகழேந்தி ஆகியோரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று காலை பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது: நானும், முதல்வரும் டெல்டாகாரர்கள். இதை சொன்னால் சிலருக்கு பிடிக்கவில்லை. நாங்கள் தான் ஒரிஜினல். நீங்கள் எல்லாம் ஒரிஜினல் அடிமைகள். எதிர்தரப்பில் ஒட்டுமொத்த துரோக கும்பலும் ஒன்று சேர்ந்து வந்துள்ளது. ஜெயலலிதா, சசிகலாவுக்கு துரோகம் செய்த பழனிசாமிக்கு இந்த முறை மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இப்போது நடக்கும் தேர்தல் டெல்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்கும் நடக்கும் தேர்தல். அடிமை கூட்டத்துக்கும், கொள்கை கூட்டத்துக்கும் இடையில் நடக்கும் போர். இவர் என்னை பார்த்து கிண்டலாக பேசுகிறார். இந்தியாவின் பல மாநிலங்களை ஆட்சி செய்யும் பாஜ, தமிழகத்தில் காலூன்ற முடியாமல், எடப்பாடி பழனிசாமி மூலம் ரிமோட் கண்ட்ரோல் ஆட்சி அமைக்க முயல்கிறது.

இதையெல்லாம் சொன்னால் நாங்கள் இறந்து விடுவோம் என்று சாபம் விடுகிறார். ஆனால் நாங்கள் அப்படியல்ல. எடப்பாடி நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும். அதிமுகவின் நிரந்தர பொது செயலாளராக இருக்க வேண்டும். 2.0 அரசின் சாதனைகளை அவர் பார்த்து நொந்து போக வேண்டும். பதவி கொடுத்த சசிகலா காலில் விழுந்தது தவறு இல்லை என்கிறார். அது கூட தவறு இல்லை. ஆனால் சசிகலா காலை வாரியது தான் தவறு. தற்போது சசிகலாவே, உதயநிதி ஸ்டாலின் கேட்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். இதற்கு எடப்பாடி பழனிசாமி என்ன பதிலளிக்கப் போகிறார். (அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எடப்பாடி இன்று (நேற்று) இங்கு வருகிறார் என்று கோஷமிட்டனர்.) அப்படியா? அப்போ அவரிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என்று உதயநிதி கூறினார்.

Tags : Edappadi ,Sasikala ,DMK ,Mannargudi ,Tiruvarur district ,TRP Raja ,STPI ,Mubarak ,Nannilam ,Humanity Party ,Jawahirullah ,DMK alliance party ,Nagapattinam ,Marxist Communist Party ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...