×

தி.மு.க. சார்பில் காங்கயத்தில் நாளை கண்டன ஆர்பாட்டம்

காங்கயம், பிப். 21: பெட்ரோல் டீசல் சமையல் காஸ்  விலை உயர்வை கண்டித்து நாளை 22ம் தேதி காலை 10.30 மணியளவில் காங்கயம், கோவை ரோடு, பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க, பொறுப்பாளர் மு.பெசாமிநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: மக்களை தொடர்ந்து வஞ்சித்து கொண்டு இருக்கும் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு பெட்ரோல், டீசல் விலையை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. அதே போல இல்லத் தரசிகள் பயன்படுத்தும் காஸ் சிலிண்டர் விலையையும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்த்தியுள்ளார்கள். இதனால் அத்யாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலையை தாறுமாறாக உயர்த்திய மத்திய பா.ஜ. அரசையும், அதற்கு துணை போகும் மாநில அ.தி.மு.க அரசையும் கண்டித்தும், இந்த விலை உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க திருப்பூர் கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பாக 22ம் தேதி(நாளை)காலை 10.30 மணியளவில் காங்கயம், கோவை ரோடு, பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.இதில் மாநில நிர்வாகிகள், மாவட்டக பொறுப்புக்குழு உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கலந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டடுள்ளது.

Tags : DMK Protest ,Kangayam ,
× RELATED சூலூரில் போக்சோ வழக்கில் இருவர் கைது