ஊட்டி தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்று நடவு பணி நிறைவு

ஊட்டி,பிப்.21: ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளிலும் மலர் நாற்றுக்கள் நடவு பணி நிறைவடைந்தது. ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த மலர் கண்காட்சியின் போது, பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில், பல வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வார்கள். அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்டு, அதிலும் மலர்கள் பூத்துக்குலுங்கும். இந்த மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்படும்.

குறிப்பாக, பூங்காவில் உள்ள மாடத்தில் இந்த மலர் தொட்டிகள் அலங்கரித்து வைக்கப்படும். இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படம் எடுத்துச் செல்வார்கள். இந்நிலையில், இம்முறை நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் 35 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்று நடவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. கோடை சீசன் நெருங்கிய நிலையில், பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுக்கள் நடவு செய்யும் பணிகள் நிறைவடைந்தது. அனைத்து தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்ட நிலையில், பனி மற்றும் வெயிலில் இருந்து அவைகளை பாதுகாக்க கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு ஊழியர்கள் பாதுகாத்து வருகின்றனர். மலர் செடிகள் வாடாமலும், காய்ந்து விடாமலும் இருக்க நாள் தோறும் தண்ணீர் தெளிக்கும் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோடை சீசன் துவங்க ஒரு மாத காலமே உள்ளதால், தற்போது பூங்காவை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

>