கோவை லண்டன் கிளினிக்கல் மறு முழங்கால், இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசம்

கோவை, பிப். 21: 57 வயதான பெண்மணி ஒருவர் பல ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதியுற்று வந்தார். பின்னர் கோவை லண்டன் கிளினிகை அணுகினார். அங்கு  மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் திறமை மிகுந்த நிபுணரான டாக்டர் ரவீந்திரன் இந்தப் பெண்மணிக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்தார். இதுகுறித்து டாக்டர் ரவீந்திரன் கூறுகையில், ‘‘இந்தப் பெண்மணிக்கு வேறொரு மருத்துவமனையில் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது சில ஆண்டுகளிலேயே தோல்வியடைந்தது.  மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு முழங்கால் வலி முன்பை விட அதிகம் ஏற்பட்டது. லண்டன் கிளினிக்கை அணுகியபின் அந்தப் பெண்மணிக்கு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன், ரத்த சோதனைகளை மேற்கொண்டு வெற்றிகரமாக மறு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இப்போது அவர் எந்த வலியும் வேதனையும் இல்லாமல் தன் சொந்த வேலையை செய்து வருகிறார். மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு முன் தகுந்த மருத்துவ ஆலோசனை மிகவும் முக்கியம். எங்கள் லண்டன் கிளினிக்கில் பல நோயாளிகளுக்கு மூட்டு வலிக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் சிகிச்சை அளித்து இருக்கிறோம். குறிப்பாக மூட்டு மாற்று சிகிச்சை தோல்வியடைந்து பணம் செலுத்த முடியாத ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் மறு முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சைகள் இலவசமாக சிறந்த முறையில் அளித்து வருகிறோம்’ என கூறினார்.

Related Stories:

>