×

விழுப்புரத்தில் கஞ்சா விற்ற வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம், ஏப். 12: விழுப்புரம் கே.கே ரோடு அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வானவராயன்(25). மணி (எ) மூட்டைமணி(26). இவர்கள் இருவரும் கடந்த மார்ச் 12ம் தேதி மருதூர் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபோது நகர காவல் நிலைய போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 80 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில் கைதான இருவரும் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால் அவர்களின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க எஸ்பி சாய்பிரனீத் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் ஷேக் அப்துல்ரஹ்மான் அதற்காண உத்தரவு பிறப்பித்தார். அதன்படி நகர காவல் நிலைய போலீசார் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Villupuram ,Vanavarayan ,Annanagar ,Villupuram KK Road ,Mani (A) ,Mootamani ,Marudhur ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...