×

கோவில்பட்டியில் ரூ.7 கோடி நலத்திட்ட உதவி அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

கோவில்பட்டி, பிப்.21: கோவில்பட்டி சத்யபாமா திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 448 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா, 210 பேருக்கு உட்பிரிவு இல்லாத பட்டா மாறுதல் இனங்கள், 300 பேருக்கு உட்பிரிவுடன் கூடிய பட்டா மாறுதல் இனங்கள், 25 பேருக்கு நகர நிலவரி திட்டம் பட்டா இனங்கள், 138 பேருக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை, 32 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 736 பேருக்கு மகளிர் திட்டம் மூலம் நலத்திட்ட உதவிகள், 20 பேருக்கு சமூக நலத்துறை மூலம் நலத்திட்ட உதவிகள், உயர்கல்வித்துறை மூலம் கல்லூரி, பாலிடெக்னிக் மாணவ, மாணவிகள் 26,395 பேருக்கு 2 ஜி.பி. டேட்டா வழங்கும் திட்டத்தில் சிம்கார்டு வழங்குதல், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டத்தின் கீழ் 482 ஏழை பெண்களுக்கு தலா 8 கிராம் வீதம் தாலிக்கு தங்கம் வழங்குதல், அம்மா இருசக்கர வாகனம் வழங்குதல் என மொத்தம் 29 ஆயிரத்து 786 பயனாளிகளுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சந்திரசேகர், தங்கமாரியம்மாள், நகர செயலாளர் விஜயபாண்டியன், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கஸ்தூரி, துணை தலைவர் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் அய்யாத்துரை பாண்டியன், அன்புராஜ், வினோபாஜி, மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கணேஷ்பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் சுப்புராஜ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி செயலாளர் சவுந்தரராஜன், ஆவின் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மாணவரணி செயலாளர் விநாயகா முருகன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சோலைச்சாமி, துணைச் செயலாளர் மாரியப்பன், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் செல்வகுமார், இணைச் செயலாளர் நீலகண்டன், எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் சீனிராஜ்  மற்றும் பாபு, ஆபிரகாம் அய்யாத்துரை, அருணாசலசாமி, போடுசாமி, வேலுமணி, ராசையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kovilpatti ,
× RELATED கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு..!!