திருச்செந்தூர் வட்டார கிளை நூலகத்தில் முப்பெரும் விழா

திருச்செந்தூர், பிப்.21: திருச்செந்தூர் வட்டார கிளை நூலகத்தில் ஆயிரத்து 500 உறுப்பினர்கள் மற்றும் 7 புரவலர்கள் இணையும் விழா மற்றும் மாணவர்கள் இயக்கம் சார்பாக புத்தகம் வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர் தலைமை வகித்தார். நூலக புரவலர்கள் வி.பி.ராமநாதன், விஜயராகவன், கோடிஸ்வரன், ஜேம்ஸ் முத்துபாண்டியன், ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் ஆயிரத்து 500 உறுப்பினர்கள் காப்பு தொகை, புரவலர்கள் தொகை நூலகத்துக்கு வழங்கி புத்தகங்களை பெற்றனர். அரசு பொது நூலகத்துறை இயக்குனர் நாகராஜன் முருகன் விழா பேரூரையாற்றினார். நிகழ்ச்சியில் பரமன்குறிச்சி சென்னை வாழ் நாடார் சங்கதலைவர் சிவசுப்பிரமணியம், பரமன்குறிச்சி கஸ்பா முத்தாரம்மன் கோயில் தலைவர் சக்திமுருகேசன், சமூக ஆர்வலர் வேல்ராமகிருஷ்ணன், திருச்செந்தூர் கோல்டன் ரோட்டரி சங்க தலைவர் விநாயகமூர்த்தி, செயலாளர் சதீஷ்குமார், மாணவர் இயக்க தலைவர் பிரகாஷ், விழுப்புரம் மாவட்ட நூலக அலுவலர் சுப்பிரமணியன் ரவி, மதன்ராஜ், காளி, செந்தில், மனேஜ், வீரமணி, மாநில நூலக அலுவலர் சங்க செயலாளர் கணேசன், முத்துராமலிங்கம், மாயாண்டிதாஸ், தூத்துக்குடி மைய நூலகர் சங்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் மாதவன் வரவேற்றார். நூலகர் மேரி ஜுலியட் சுகுணா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகர்கள் சிவா, மோகன், ஸ்டாலின், ராதாகிருஷ்ணன், ராஜன், கீதா, உமா, ஆனந்தி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>