×

பாஜ ஆட்சியில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர்

தூத்துக்குடி, பிப்.21: தூத்துக்குடி மாவட்ட பாஜ சிறுபான்மை அணி சார்பில் ஏழை-எளியவர்களுக்கு தையல்மெஷின், சேலை உள்ளிட்ட ரூ.5லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி அபிராமி மஹாலில் நேற்று நடந்தது. விழாவிற்கு, மாநில சிறுபான்மை அணி செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமை வகித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி.வாரியர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை ஏ.முருகன், தூத்துக்குடி மாவட்ட அறிவுஜீவி அணி அமைப்பு செயலாளர் நாட்டாமை எம்.கே.மனோகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் கோவை ஜோசப் ஜான்சன் வரவேற்றார்.

விழாவில், மாநில சிறுபான்மை அணி தலைவர் ஆசிம்பாஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு 500பெண்களுக்கு சேலை, 25பேருக்கு தையல்மெஷின் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி, நாம் அனைவரும் இந்தியர் நமக்குள் ஜாதி, மதம், இனம், மொழி என எந்தவிதமான பாகுபாடுகளும் இல்லை என்ற நிலைப்பாடுடன் செயல்பட்டு வருகிறார். அவரது நிலைப்பாட்டின் அடிப்படையில், அவரது ஆணையை ஏற்று நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் எப்போதும் மக்களுக்கு இதுபோன்ற உதவிகளை எந்தவித பிரதிபலன்களையும் எதிர்பார்க்காமல் செய்து கொண்டே தான் இருப்போம். பாஜ ஆட்சியில் தான் சிறுபான்மையின மக்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த ஆட்சியில் தான் சிறுபான்மையின மக்களுக்கு பதவி கொடுத்து கவுரவப்படுத்தப்படுகிறார்கள். இதன்அடிப்படையில் தான் நான் இத்தகைய மிகப்பெரும் பொறுப்பில் இருந்து வருகிறேன். ஆனால், சிறுபான்மையின மக்களுக்கு பாஜ அரசு தீங்கு இழைத்து வருவதாக காங்கிரஸ் போன்ற கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் அணிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பதை தலைமை தான் முடிவு செய்யும். பெட்ரோல், டீசல் விலையானது மாநில அரசுகளின் வரி உயர்வுக்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தற்போதுள்ள இக்கட்டான சூழலில் இந்த விலை உயர்வினை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வாறு கூறினார்.

இதில், மாநில சிறுபான்மை அணி துணைத்தலைவர்கள் பிரவின்பால், ஜான்சன், மாநில சிறுபான்மை அணி செயலாளர்கள் கல்வாரி தியாகராஜன், சதிஸ்ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜ தலைவர் பால்ராஜ், மாநில வணிகர் பிரிவு தலைவர் ராஜகண்ணன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சசிகலாபுஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் அஜ்மல்கான், மாவட்ட தலைவர்கள் ராமநாதபுரம் அப்துல்லா, விருதுநகர் தாஸ்வின், சிவகங்கை பீட்டர் ஆனந்த்,  சிறுபான்மை அணி வடக்குமாவட்ட பொதுச்செயலாளர் ஜெபக்குமார், முன்னாள் கவுன்சிலர் பிரபு, நிர்வாகி ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் ஜெயம் செல்வராஜ் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மை அணி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் எஸ்.பி.வாரியர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கிராமப்புற மற்றும் நகர்புற வளர்ச்சி பிரிவு செயலாளர் மணக்கரை ஏ.முருகன், தூத்துக்குடி மாவட்ட அறிவுஜீவி அணி அமைப்பு செயலாளர் நாட்டாமை எம்.கே.மனோகர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags : BJP ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...