நெல்லை மண்டல இணை ஆணையர் உள்பட அறநிலைய துறை அதிகாரிகள் 6 பேர் பணியிட மாற்றம் தமிழக அரசு உத்தரவு

சென்னை, பிப்.21: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் பணியாற்றி வந்த 6 இணை ஆணையர்களை பணியிடமாற்றம் செய்து அறநிலையத்துறை செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார்.   

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: நெல்லை மண்டல இணை ஆணையர் பரஞ்சோதி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையராகவும், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் இணை ஆணையர் பழனி குமார், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையராகவும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் இணை ஆணையர் கல்யாணி, சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையராகவும், சமயபுரம் மாரியம்மன் கோயில் இணை ஆணையர் அசோக்குமார் கடலூர் மண்டல இணை ஆணையராகவும், கன்னியாகுமரி மண்டல இணை ஆணையர் அன்புமணி தூத்துக்குடி மண்டல இணை ஆணையராகவும், மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் செல்வராஜ், நெல்லை மண்டல இணை ஆணையராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>