நெல்லையில் மாவட்ட மாநாடு பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு ஏப். 14ம் தேதி பொது விடுமுறை

நெல்லை, பிப்.21: அம்பேத்கர் பிறந்ததினமான ஏப். 14ம் தேதி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பொது விடுமுறை விட வேண்டும் என நெல்லையில் நடந்த மாவட்ட மாநாட்டில்  எஸ்.சி., எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

 நெல்லை வண்ணார்பேட்டையில் செயல்படும் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் எஸ்.சி,எஸ்.டி. ஊழியர்கள் நலச்சங்கத்தின் சார்பில் 5வது மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் விஜய் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார். மாவட்ட இணைச் செயலாளர் பாபுகுமார் துவக்கிவைத்துப் பேசினார். மாநில தலைவர் விஜயன், மாநில இணைச் செயலாளர் பிரேம்குமார், துணைப் பொது மேலாளர்கள் வீராசாமி, மணிமாறன் வாழ்த்திப் பேசினர்.

மாநாட்டில், பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஊழியர்களுக்கு மாத இறுதியில் உரிய தேதியில் மாத சம்பளம் வழங்க வேண்டும். கோஆப்பரேட்டிவ் சொசைட்டியில் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். ஊழியர்கள் சேமநல நிதியில் நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அம்பேத்கர் பிறந்த தினமான ஏப். 14ம் தேதி பிஎஸ்என்எல் அலுவலகத்திற்கு பொது விடுமுறை விட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் மாவட்டத் தலைவராக பாபுகுமார், துணைத்தலைவர்களாக கலைசெல்வன், பண்டாரம், செயலாளராக விஜய், இணைச் செயலாளராக ஜான்சிராணி உள்ளிட்ட 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.

Related Stories:

>