தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கல்

நெல்லை,பிப்.21: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் முகாம் முகவூரில் உள்ள செட்டியார்பட்டியில் மிராஸ் பார்த்தசாரதி டிரஸ்ட் உடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முகாமில் 52 மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. முகவூர், தளவாய்புரம், செட்டியார்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு உபகரணங்கள் பெற்றனர். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முகவூர் கிளை ஊழியர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.

Related Stories:

>