×

அசாம் முதல்வரின் மனைவி பற்றிய சர்ச்சை பேச்சு காங். தலைவர் பவன் கேராவுக்கு ஜாமீன்

ஐதராபாத்: காங்கிரஸ் பொதுசெயலாளர் பவன் கேரா அண்மையில், “அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி புயான் சர்மாவிடம் பல பாஸ்போர்ட்கள் உள்ளன. அவருக்கு சொந்தமாக வௌிநாட்டு சொத்துகளும் உள்ளன. இதுகுறித்த விவரங்களை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிடவில்லை” என குற்றம்சாட்டியிருந்தார்.

இதுகுறித்து பவன் கேராவுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின்கீழ் கவுஹாத்தி குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக பவன் கேரா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த ஐதராபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சுஜானா கலாசிகம், “இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஒருவாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் ஒரு வாரம் ஜாமீன் வழங்கப்படுகிறது” என உத்தரவிட்டார்.

Tags : Assam ,Chief Minister ,Congress ,Pawan Khera ,Hyderabad ,General Secretary ,Himanta Biswa Sarma ,Riniki Bhuyan Sharma ,
× RELATED பெங்களூரு அரசு மருத்துவமனை...