×

ஓசூரில் நாளை திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

ஓசூர், பிப்.21: ஓசூர் மாநகர திமுக பொறுப்பாளர் சத்யா எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தவாறு நாளை(22ம் தேதி) காலை 9 மணிக்கு ராம் நகர் அண்ணா சிலை அருகில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் ஓசூர் மாநகர் மற்றும் ஒன்றியத்தைச்சேர்ந்த திமுக நிர்வாகிகள், தொண்டர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு சத்யா எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Tags : DMK protest ,Hosur ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...