×

850 மூட்டை மஞ்சள் ரூ.70 லட்சத்திற்கு ஏலம்

அரூர், ஏப்.11: அரூர் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. இதில் அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், தீர்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 128 விவசாயிகள், 850 மூட்டை மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் விரலி மஞ்சள் ரூ.13,183 முதல் ரூ.14,485 வரையும், குண்டு (கிழங்கு) மஞ்சள் குவிண்டால் ரூ.12,480 முதல் ரூ.13640 வரையும், பணங்காளி மஞ்சள் ரூ.30,939 முதல் ரூ.33273 வரை ஏலம் போனது. இதில் மொத்தம் ரூ.70லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.

Tags : Aroor ,Aroor Cooperative Agricultural Producers Association ,Morappur ,Kambainallur ,Theerthamalai ,Kottapatti ,Virali… ,
× RELATED வேலூர் சத்துவாச்சாரியில் துணிகரம்;...