அரூர், ஏப்.11: தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் நடைபெற உள்ளது. இதையொட்டி அரூர் சட்டமன்ற தொகுதியில், 100 சதவீதம் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி, ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என வலியுறுத்தி, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் தொழிற் நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுண்டாங்கிபட்டி, பச்சனாம்பட்டி, அக்ரகாரம், என்ஆர்ஜிஎஸ் பணியாளர்களிடம் மற்றும் பொதுமக்களிடம் தேர்தல் வாசகங்கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தாசில்தார் பெருமாள் வழங்கினார்.
