×

என் தலைமையில் தான் ஆட்சி அமையும் நிதிஷ்குமார் நிலை எனக்கு ஏற்படாது முதல்வர் ரங்கசாமி பேட்டி

புதுச்சேரி, ஏப். 10: பீகாரில் நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட நிலை எனக்கு ஏற்படாது. எனது தலைமையின் கீழ் தான் ஆட்சி நடக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதிபடி கூறியுள்ளார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாக்களித்த பிறகு தொகுதி வாரியாக சென்று பார்வையிட்டு அங்குள்ள நிலவரம் குறித்து நேற்று மாலை கேட்டறிந்தார். அப்போது, வில்லியனூர் புறவழிச்சாலையிலுள்ள டீக்கடைக்கு சென்று டீ, அதிரசம் சாப்பிட்டபடி பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட, கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. யாருக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறீர்கள்?
பதில்: மக்கள் விழிப்புணர்வுடன் வாக்களித்துள்ளனர். மக்கள் நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைந்துள்ளது ஓர் காரணம். நாங்கள் ஆட்சிக்கு திரும்ப வரவேண்டும் என்றுதான் வாக்களிக்கிறார்கள். வாக்களிப்பு கிராமங்களில் அதிகமாக உள்ளதும் இதற்கு ஓர் காரணம்.
கேள்வி: நீங்கள் பிரசாரத்துக்கு வந்தபோது கிராமத்தில்தானே உங்களிடம் அதிகம் கேள்வி கேட்டார்கள்?
பதில்: ஆமாம். நான் செய்வதால் என்னிடம் கேட்டார்கள். கடந்த மக்களவைத் தேர்தலின்போது ரேஷன் திறந்து அரிசி, கோதுமை கேட்டார்கள், நானும் ரேஷன் கடையை திறந்து இலவச அரிசி, கோதுமை தந்தேன். தற்போதும் தங்கள் தேவைகளை என்னிடம் கேட்டார்கள். நான் செய்வேன் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
கேள்வி: இந்த முறை எத்தனை இடங்கள் வெல்வீர்கள்?
பதில்: ஆட்சியமைக்கும் அளவுக்கு தேர்தலில் வெல்வோம்.
கேள்வி: எதிர்க்கட்சியினர் நிதிஷ்குமாரின் நிலைதான் உங்களுக்கு ஏற்படும் என்கிறார்களே.?
பதில்: அதுபோல் ஏற்படாது. என் தலைமையில் தான் ஆட்சி அமையும் என்று பாஜகவினர் சொல்லியுள்ளார்கள். அவர்கள் சொல்வதை செய்வார்கள். ஒன்றிய அரசுடன் இணக்கமாக இருந்து பல திட்டங்களை செயல்படுத்தினோம்.
கேள்வி: கூட்டணி கட்சி தொகுதிகளுக்கு ஏன் பிரசாரம் செல்லவில்லை.?
பதில்: கூட்டணிக்கட்சியில் பெரிய தலைவர்கள் பிரசாரத்துக்கு வந்தார்கள். நான் தான் என் கட்சிக்கு செல்ல வேண்டும். நாட்களும் குறைவாக இருந்தது. அதனால் தான் சென்றேன். ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை இலக்காக வைத்துதான் நாங்கள் அனைவரும் பிரசாரம் செய்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Nitish Kumar ,Chief Minister ,Rangaswamy ,Puducherry ,Bihar ,
× RELATED போலீசை கண்டதும் மணல் திருடர்கள் ஓட்டம்